குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: 34 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் குப்பை மலை சரிந்து விழுந்ததில் புதைக்கப்பட்ட 50 வரையான துப்பரவுத் தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை தேடினர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரத்தின் பினாலிவ் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிவில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிட்டத்தட்ட 50 துப்புரவுத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
34 பேர் இதுவரை காணவில்லை என்றும், ஒரே இரவில் மீட்கப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குப்பை மேடு கிட்டத்தட்ட நான்கு மாடி உயிரமுள்ளது.


Post a Comment